இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பல தசாப்தங்கள் பழமையான ஜப்பான் - இலங்கை நட்புறவை பலப்படுத்த ஒஹ்டானி சோசன் தேரர் வழங்கிய பங்களிப்பு மகத்தானது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

திகதி : 2020-02-18

பல தசாப்தங்கள் பழமையான ஜப்பான் - இலங்கை நட்புறவை பலப்படுத்த ஒஹ்டானி சோசன் தேரர் உள்ளிட்ட ஹோங்கான்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட பங்களிப்பு மகத்தானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். இன்று (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜப்பான் ஹோங்கான்சி மன்றம் மற்றும் கியோட்டோவிலுள்ள ஹோங்கான்சி விகாரையின் வணக்கத்துக்குரிய ஒஹ்டானி சோசன் தேரருக்கு 'சாசன ரத்ன' கௌரவ பட்டம் மற்றும் 'சன்னஸ்' சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

நீண்ட கால வரலாறு கொண்ட ஜப்பான் ஹோங்கான்சி கலாச்சார மேம்பாடு மன்றம் உலகளாவிய பௌத்த சமூகத்தினரின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை மேம்படுத்த அதிக பங்களிப்புகளை மேற்கொண்டுள்ளது. ஜப்பானும் இலங்கையும் பழங்காலத்திலிருந்தே கடினமான சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் முன்னின்றதாக தெரிவித்த கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஹோங்கான்சி மன்றத்தினால் இலங்கையில் சர்வதேச பௌத்த நூதனசாலைக்கு ஜப்பானிய அறையொன்றை வழங்கியமை தொடர்பிலும் நன்றி தெரிவித்தார்.

 

ஜப்பான் முன்னாள் பேரரசரின் சகோதரர் ஒஹ்டானி சோசன் தேரர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மற்றும் பிரான்ஸ் சோபோன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று நகோயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக செயப்படுவதோடு விசேடமாக ‘மஹாயான தர்ம’ மற்றும் ‘தேரவாத’ பௌத்தத்துக்கு இடையில் பரஸ்பர தொடர்புகளை விருத்தி செய்ய செயற்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

 

இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சியின் பிரதம கொரடா கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ வாசுதேவ நாணயக்கார, கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ நிமல் லன்ஸா, கௌரவ திலங்க சுமதிபால உள்ளிட்டோர், பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஆஷு மாரசிங்க, பாலித ரங்கே பண்டார, ஏ.எச்.எம். பௌஸி, மயந்த திசாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, சுமேதா ஜீ. ஜயசேன ஆகியோரும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா உள்ளிட்ட ஜப்பானிய தூதுக்குழுவினர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom