இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்கள் நியமனம்

திகதி : 2020-02-05

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களின் தலைமையில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற நிலையியல் கட்டளை 121இன் ஏற்பாடுகளுக்கமைய 2020 ஜனவரி 24ஆம் திகதி கூடிய தெரிவுக் குழுவின் அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

கலாநிதி பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுசந்த புஞ்சிநிலமே, தாரக பாலசூரிய, காஞ்சன விஜேசேகர ஆகிய அமைச்சர்களும் டிலான் பெரேரா, பிமல் ரத்னாயக்க, மயந்த திஸாநாயக்க, முஜிபுர் ரஹ்மான், பேராசிரியர் ஆசு மாரசிங்க, கலாநிதி எஸ்.எம். முகம்மட் இஸ்மாயில் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom