பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது |
திகதி : | 2020-01-20 |
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட குழுக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவின் பங்களிப்புடனான பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை (21) சபையில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்தத் தெரிவுக்குழுவானது பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட 17 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.
கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ நிமல் சிறிபால த. சில்வா, கௌரவ தினேஷ் குணவர்த்தன, கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ மஹிந்த சமரசிங்க, கௌரவ காமினி லொக்குகே, கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன, கௌரவ ரோஹித்த அபேகுணவர்த்தன, கௌரவ லஷ்மன் கிரியல்ல, கௌரவ ஜோன் அமரதுங்க, கௌரவ விஜித ஹேரத், கௌரவ ரிஷாட் பதியுதீன், கௌரவ பாட்டலி சம்பிக்க ரவணக்க, கௌரவ மனோ கணேசன், கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்தத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த 17 உறுப்பினர்களும் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான தெரிவுக்குழு உறுப்பினர்களாகச் செயற்படுவர். இந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் நாளை (21) பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெறவுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






