இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சி பிரதம கொரடா ஆகியோர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்

திகதி : 2020-01-03

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

 

சபை முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை, சபை முதல்வர் அலுவலகப் பணியாளர்கள் வரவேற்றதுடன், அவர் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

அதன் பின்னர் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரை அவருடைய அலுவலகப் பணியாளர்கள் வரவேற்றதுடன், உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பொறுப்புக்களை அவர் பொறுப்பேற்றார்.

 

இந்நிகழ்வுகளில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

loh-cgw-assume-duties-jan

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom