இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற உறுப்பினர் ரீ. ரஞ்ஜித் த சொய்சா காலமானார்

திகதி : 2019-12-04

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று (04) காலை காலமானார். அவருடைய பூதவுடல் நாட்டுக்கு எடுத்துவரப்படவிருப்பதுடன்¸ இறுதிச் சடங்குகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

 

காலமாகும்போது இவருக்கு 57 வயதாகும். இவர் 2010ஆம் ஆண்டு முதற் தடவையாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார். உயிரிழக்கும்வரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக செயற்பட்டுவந்தார்.

 

1990களின் ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக பிரதான அரசியலில் இணைந்துகொண்ட இவர்¸ 1997ஆம் ஆண்டு அட்டகலம்பன்ன பிரதேச சபையின் தலைவராகவும்¸ 2002ஆம் ஆண்டு அப்பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் சேவையாற்றியிருந்தார். அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியின் சார்பில் சப்ரகமுவ மாகாண சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட அவர்¸ அங்கு காணி¸ விவசாயம்¸ நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்கான அமைச்சராகவும்¸ சுகாதாரம்¸ சுதேச மருத்துவம் மற்றும் பெண்கள் விவகார அமைச்சராகவும் மக்கள் சேவையாற்றியிருந்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை, கலை, மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினராகவும்¸ பெருந்தோட்டத்துறை அமைச்சின் ஆலோசனைக்குழு உறுப்பினரகாவும் அவர் செயற்பட்டிருந்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom