ரஷ்ய இராஜதந்திரிகள் பாராளுமன்றத்துக்கு விஜயம் |
திகதி : | 2019-11-15 |
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி.பி.மற்றேரி தலைமையில் ரஷ்ய தூதரகத்தின் இராஜதந்திரிகள் 2019 நவம்பர் 11ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்துக் விஜயம் மேற்கொண்டிருந்தனர். க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சிபெறும் மாணவர்களில் 50 பேருக்கு 2020 ஜனவரி மாதம் ரஷ்ய புலமைப்பரிசில் வழங்கவிருப்பதாகவும் தூதுவர் இச்சந்திப்பின் போது குறிப்பிட்டார். அத்துடன், ரஷ்யாவுடன் தொடர்ந்தும் பேணிவரும் நட்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்துக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.
ரஷ்யத் தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு.அலஸ்சே பூடுனோவ், தூதரகத்தின் முதல் செயலாளர் மற்றும் ரஷ்ய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் திருமதி.அனஸ்டேசியா.வி.ஹொக்லோவா ஆகியோரும் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டிருந்தனர். இக்குழுவினரை சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய வரவேற்றிருந்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







