தேசிய புத்தாக்க முகவராண்மை சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் கையொப்பமிட்டார் |
திகதி : | 2019-11-15 |
பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தேசிய புத்தாக்க முகவராண்மை சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய நேற்று கையொப்பமிட்டார். கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் இச்சட்டமூலம் திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
தேசிய ஆய்வுகளை தேசிய பொருளாதாரத்திற்கு பயன்படுத்துதல், புத்தகம் தொடர்பில் காணப்படும் தடைகளை கண்டறிதல் மற்றும் புத்தகத்துக்காக தனியார் துறையினரின் உதவியை பெற்றுக்கொள்ளும் நிறுவனமாக தேசிய புத்தாக்க முகவர் நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் கடந்த நவம்பர் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதற்கு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தனர்.
இச்சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று கையொப்பமிட்டார்.
தேசிய புத்தாக்க முகவராண்மை ஒரு நிர்வாக சபையால் நிவாகிக்கப்படும். இந்த நிர்வாகத்தின் தலைவராக ஜனாதிபதியின் செயலாளர் காணப்படுவார். ஏனைய உறுப்பினர்களாக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சின் அதிகாரியொருவர், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்படும் நபரொருவர், இலங்கை புலமைச் சொத்து அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம், விஞ்ஞான விடயப்பொறுப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர், தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி விடயப்பொறுப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர், சர்வதேச வர்த்தக விடயப்பொறுப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர், இலங்கை நெனோ தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர் உள்ளடங்கப்படுவர்.
அவ்வப்போது ஜனாதிபதியின் அறிவுறுத்தல்படி நிர்வாக சபை செயற்படவேண்டும். அதேபோன்று ஜனாதிபதியின் மூலம் இந்த சட்டத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஒழுங்குவிதிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து ஒழுங்குவிதிகளும், அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அனுமதிக்காக பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படவேண்டும்.
புத்தாக்க தொழில்முனைவோர் வியூகத்திற்கு ஏற்ப தேசிய புத்தாக்க சூழலை பேணுதல், ஆய்வுகள் மற்றும் தொழிநுட்ப பரிமாற்றம் மூலம் உருவாகும் உயர் தொழிநுட்ப நிறுவனங்களுக்கான வசதிகளை செய்துகொடுத்தல், தனியார் மற்றும் அரச துறையினருடனான ஒருங்கிணைப்பு என்பன இந்த முகவர் நிறுவனத்துக்கு வழங்கப்படும் பொறுப்புகளாகும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






