2019 ஜூலை 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-07-24 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவசகார நிலைமை விதிகளை பிரகடனம் செய்தல்
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுடனான ஐ.நா.வின் அறிக்கையாளரின் சந்திப்பு தொடர்பாக சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட வினா
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) மற்றும் 153ஏ உறுப்புரைகளின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான (2019.01.01 - 2019.03.31) கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான (2019.01.01 - 2019.03.31) எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த செயலாற்றல் அறிக்கையும் கணக்குகளும்
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த அறிக்கைகள்
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் உயர்கல்விப் பிரிவின் வருடாந்த அறிக்கை
(v) 2012 ஆம் ஆண்டுக்கான லங்கா சதொச லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(vii) 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, புலமைச் சொத்துச் சட்டத்தின் 6, 9, 17, 18 மற்றும் 25 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 204 ஆம் பிரிவின் கீழ் பாடல்கள் அல்லது இசை ரீதியான ஆக்கங்களின் உரித்தாளர்களுக்கு உரிமைத் தொகையினைச் செலுத்தும் பொறிமுறை ஒன்றினை நடைமுறைப்படுத்திக் கொள்ளல் மற்றும் கூட்டுச் சங்கங்களை வலுவூட்டல் என்பன தொடர்பில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூன் 17 ஆம் திகதிய 2128/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜோன் அமரதுங்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ அஜித் பி. பெரேரா
(iii) கௌரவ வசந்த அலுவிஹாரே - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே
(v) கௌரவ வாசுதேவ நாணாயக்கார - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - நான்கு மனுக்கள்
(vii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி - நான்கு மனுக்கள்
(viii) கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
(ix) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பானது
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
திரைப்படங்கள் விநியோகத்திலுள்ள சிக்கல்கள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம்
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடுகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1854 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூலை 25ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






