2019 ஜூலை 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-07-23 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : உயர் பதவிகள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக்காட்சித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2017 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் ஆண்டறிக்கை
(v) 2017 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2014, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடெட்டின் ஆண்டறிக்கைகள்
(viii) 2019 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்களுக்குப் பதிலாக கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ லக்கி ஜயவர்தன - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ அநுர திசாநாயக்க
பிரித்தானியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள குப்பை
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
முல்லைதீவு, கண்ணியா மற்றும் இதர பிரதேசங்களிலுள்ள தொல்பொருளியல் இடங்கள்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களுக்கு “1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, விடுமுறை நாட்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii) கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு “2000 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
நிருவாக மாவட்டங்கள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சிவில் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூலை 24ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






