2019 ஜூலை 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-07-11 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIX ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XI பகுதியையும்;
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் VII மற்றும் XXXV ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களுக்குப் பதிலாக கௌரவ ஆனந்த அலுத்கமக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ புத்திக பத்திறண - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
(iii) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தினைத் திருத்துவதற்காக
“குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களுக்கு “இலங்கை பிளாஸ்ரிக் மற்றும் இறப்பர் நிறுவகத்தினைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 51(2)(அ) இன் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலத்தின் பிரதிகள் ஒவ்வொரு மாகாண சபைக்கும் அனுப்பிவைக்குமாறு தலைமை தாங்குபவர் செயலாளர் நாயகத்தை பணித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பிரதம அமைச்சர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மை
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 92; எதிராக 119) பின்னர் நிராகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1841 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூலை 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






