இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஜூலை 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-07-10

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான (2019.01.01-2019.03.31) நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;  மற்றும்
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55(5) உறுப்புரைகளின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான (2019.01.01-2019.03.31) அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் செயற்திறன் பெறுபேற்று அறிக்கையும் கணக்கும்
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்கறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(vi)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் ஆண்டறிக்கை
(viii)    2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான  புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபையின் ஆண்டு அறிக்கைகள்
(ix)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர்  கௌரவ காமினி லொக்குகே அவர்களுக்குப் பதிலாக கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் மூன்று வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i)    கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(ii)    கௌரவ  அநுர திசாநாயக்க
(iii)    கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

வவுனியாவில் வீட்டுத் திட்டமொன்றை முடிவுறுத்தல்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பிரதம அமைச்சர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மை

விவாதிக்கப்பட்டதுடன், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூலை 11ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom