2019 ஜூலை 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-07-09 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘C’ : “ஊவா மாகாண சபையின் சுற்றுலா அபிவிருத்திப் பிரிவின் வரைவு நியதிச் சட்டம்” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான மாணிக்க மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான நீர்வளங்கள் சபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் ஆண்டறிக்கை
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(vii) 2017 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(viii) 2017 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(x) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(xi) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xii) 2014 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(xiii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xiv) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xv) 2018 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சின் வருடாந்த செயல்திறன் அறிக்கை
(xvi) 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆம் பிரிவின் கீழ் மருத்துவ உபகரணங்கள் விலைகுறித்தல் தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 15 ஆம் திகதிய 2114/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii) 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆம் பிரிவின் கீழ் மருந்துகள் மீதான விலைகளின் உச்சவரம்பு தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 15 ஆம் திகதிய 2123/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xviii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடமொன்றை நிறுவுதல் தொடர்பில் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஏப்றல் 30 ஆம் திகதிய 2121/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix) 1987 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க பொது ஒப்பந்தங்கள் சட்டத்தின் 36 ஆம் பிரிவின் கீழ், 1988 யூன் 2 ஆம் திகதிய 508/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2012 ஓகஸ்ட் 30 ஆம் திகதிய 1773/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் இறுதியாகத் திருத்தப்பட்டதுமான ஒழுங்குவிதி, உடனடியாக வலுப்பெறும் வகையில் அதிமேதகு சனாதிபதி அவர்களின் ஒப்புதலுடன் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 24 ஆம் திகதிய 2055/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றின் இணைந்த அறிக்கை, போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களுக்குப் பதிலாக கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடல் அட்டைகள் பிடித்தல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு சமுர்த்தி சலுகைகளை வழங்குதல் தொடர்பாக 2019.06.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா
(ii) சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாக 2019.06.06 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க
ஆகியோர் எழுப்பிய வினாக்களிற்கு ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் கௌரவ தயா கமகே அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) ஸ்ரம வாசனா நிதியம் (திருத்தம்) - 1998 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, ஸ்ரம வாசனா நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii) சம்பளச் சபைகள் (திருத்தம்) - சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
2019 சனவரி 24ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை மூலம் தடைபெறாமல் 2019 யூலை 08 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு,
• கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு - கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
• பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு - பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
என பெயர் குறிப்பிடுமாக என கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 117 - நிகழ்ச்சித்திட்டம் 02 (நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு)
(ii) தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தோட்டப் பகுதியில் உப அஞ்சல் அலுவலகமொன்றினை தாபித்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வேலு குமார் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1902 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூலை 10ஆம் திகதி புதன்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






