இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஜூன் 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-06-28

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை

(iii)    2018 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(iv)    2017.07.01 முதல் 2017.09.30 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள்  பற்றிய குழுவினால் 2019.01.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில்  தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ அநுர திசாநாயக்க

இலங்கை கடற்படை உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வு

(ii)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முகாமைத்துவ உதவியாளர்களை சேர்த்துக் கொள்ளல்

மேற்சொன்ன வினாவிற்கு பாராளுமன்ற சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

அளிப்புகளை அல்லது கையுதிர்ப்புச் சாதனங்களை வைத்திருப்போராகவுள்ள பிரசைகளினால் வைத்திருக்கப்பட்ட அரச காணிகளுக்கு முற்றுரிமை உரித்தை வழங்குவதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக

“அரச காணி (விசேட ஏற்பாடுகள்)”

எனும் சட்டமூலத்தினை பாராளுமன்றச் சபை முதல்வர் கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப் பகிஷ்கரிப்பு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சிசிர ஜயகொடி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1424 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூலை 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom