2019 ஜூன் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-06-27 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவசகார நிலைமை விதிகளை பிரகடனம் செய்தல்
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘B’ : ஊவா மாகாண சபையிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்தி
‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேயிலைச் சபையின் வருடாந்த அறிக்கை
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான புத்தசாசனம் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் செயற்திட்ட அறிக்கை
(vi) 2018 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர மாவட்ட செயலகத்தின் செயற்திறன் அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான தொல்லியல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2018 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் திணைக்களத்தின் தரக்கணிப்பு அறிக்கை
(xi) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (2) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் செஸ் வரி தொடர்பில் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 5 ஆம் திகதிய 2113/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் செஸ் வரி தொடர்பில் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 5 ஆம் திகதிய 2113/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் கீழ் களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பௌதீகவியல் துறை மற்றும் தாவரவியல் துறை என்னும் பதிவுகளுக்குப் பதிலாக முறையே பௌதீகவியல் மற்றும் இலத்திரனியல் துறை மற்றும் தாவர மற்றும் மூலக்கூற்று உயிரியல் துறை எனும் பதிவுகளை இடுவது தொடர்பாக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 27 ஆம் திகதிய 2116/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் கீழ் றுகுணுப் பல்கலைக்கழகத்தின் பீடங்களையும் துறைகளையும் குறித்துரைக்கின்றதான 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 19 ஆம் திகதிய 1567/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையைத் திருத்துவது தொடர்பாக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 பெப்ரவரி 18 ஆம் திகதிய 2111/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கல்வி பற்றிய உப குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
மின்சார விலை நடைமுறைகளை சீர்திருத்துதல்
மேற்சொன்ன வினாவிற்கு மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2019 ஜூன் 22ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு கௌரவ பாராளுமன்ற சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1841 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூன் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






