2019 ஜூன் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-06-21 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் செயலாற்று அறிக்கை
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான விலை மதிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பெறுபேற்று அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் நிறைவேற்று அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2018 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் செயற்பாட்டு அறிக்கை
(vii) 2014 / 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட றக்னா ஆரக்ரக லங்காவின் வருடாந்த அறிக்கை
(viii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் ஆண்டறிக்கை
(x) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை
(xi) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணு சக்தி சபையின் வருடாந்த அறிக்கை
(xii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆண்டறிக்கை
(xiii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(xiv) 2018.02.23 முதல் 2018.10.12 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.04.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அறிக்கையில் மேல் மாகாண சபை, மாத்தளை மாநகர சபை, கலென்பிந்துனுவெவ பிரதேசசபை மற்றும் திருகோணமலை நகரசபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv) 2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi) 2017.07.01 முதல் 2017.09.30 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் 2019.01.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அழகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உயர்கல்வி பற்றிய உப குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ நிரோஷன் பெரேரா
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
2018/2019 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள்
மேற்சொன்ன வினாவிற்கு நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் பதில் அமைச்சர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஹம்பாந்தோட்டாவில் குழந்தை இறப்பு தொடர்பான விசாரணை
மேற்சொன்ன வினாவிற்கு சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்கள் பதிலளித்தார்.
(iii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
இலங்கை-ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் கிளிநொச்சிக் கிளையின் குறைபாடுகள்
மேற்சொன்ன வினாவிற்கு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கௌரவ கருணாரத்ன பரணவிதான அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) சுகாதார அமைச்சு வாகனங்கள் தொடர்பாக லங்காதீப பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சம்பந்தமாக கூற்றொன்றினை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்கள் முன்வைத்தார்.
(ii) பாராளுமன்றத்திற்கு வெளிநாட்டு நிதியுதவி அளிக்கப்பட்ட ஆலோசகர் தொடர்பிலான கூற்றொன்றினை பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் முன்வைத்தார்.
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ றிஸாட் பதியுதீன் அவர்கள் தற்கொலை குண்டுதாரியுடன் தனக்கு உள்ள தொடர்பு பற்றி கௌரவ விமல் வீரவன்ச அவர்கள் தெரிவித்த கருத்து சம்பந்தமாக தனிப்பட்ட விளக்கமொன்றினை வழங்கினார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பாடசாலைகளின் மேம்பாட்டுக்காக பெருந்தோட்ட பாடசாலைகள் பிரிவு சிறப்பு பிரிவாக இயங்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1910 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூன் 27ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






