இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஜூன் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-06-20

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான  நிதி அமைச்சின் ஆண்டறிக்கை அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபையின் வருடாந்த அறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vi)    2017/18 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை

(viii)    2018 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix)    2017 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத திணைக்களத்தின் செயலாற்று அறிக்கை
(x)    2018 ஆம் ஆண்டுக்கான சுகாதார, போசணை மற்றும் சுதே வைத்திய அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    2018 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சின் நீர்ப்பாசனப் பிரிவின் வருடாந்த செயற்திறன் அறிக்கை
(xii)    2017 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2018 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களத்தின் செயல்நிறைவேற்று அறிக்கை

(xiv)    2019 ஆம் ஆண்டின்  32 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ நலின் பண்டார ஜயமஹ
(ii)     கௌரவ புத்திக பத்திறண        -    பதினொரு மனுக்கள்
(iii)     கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றொன்றினை  தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ அப்துல் ஹலீம் அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் (நீக்கல்) சட்டமூலம்

இரண்டாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு (ஆதரவாக 91; எதிராக 69) திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கௌதாரிமுனை பகுதியில் இடம்பெறும் மண் அகழ்வு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1906 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூன் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom