2019 ஜூன் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-06-19 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2011 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும்;
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும்;
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும்;
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XII ஆம் பகுதியையும்; மற்றும்
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIV, XV, XVI மற்றும் XVII, ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் III ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் வருடாந்த ஆண்டறிக்கை
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டு அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(vi) 2018 ஆம் ஆண்டுக்கான அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii) 2018 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 2018 ஆம் ஆண்டுக்கான காலி மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயற்றிட்ட அறிக்கை மற்றும் கணக்குகள்
(x) 2018 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்ட செயலகத்தின் செயற்றிறன் அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(xi) 2018 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்ட செயலகத்தின் வினைத்திறன் அறிக்கையும் கணக்குகளும்
(xii) 2018 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2018 ஆம் ஆண்டுக்கான தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வருடாந்த செயற்சாதனை அறிக்கை
(xiv) 2018 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv) 2018 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சின் செயல்திறன் அறிக்கை
(xvi) 2018.02.23 முதல் 2018.10.12 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.04.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அறிக்கையில் கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம்
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஹொரண மில்லேவ தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1906 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூன் 20ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






