இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஜூன் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-06-18

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் செயற்திறன் அறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான அரச தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் செயற்திறன் அறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2018 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் செயல் இலக்கு அறிக்கை
(vi)   2018 ஆம் ஆண்டுக்கான காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2018 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கையும் கணக்கும்
(viii)    2018 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்று மற்றும் கணக்கறிக்கை
(ix)    2018 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் செயற்பாட்டு மற்றும் கணக்கு அறிக்கை
(x)    2018 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயல்நிறைவேற்று மற்றும் கணக்கு அறிக்கை
(xi)    2018 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் செயல்திறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(xii)    2018 ஆம் ஆண்டுக்கான குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் செயலாற்று அறிக்கை
(xiii)    2018 ஆம் ஆண்டுக்கான உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xiv)    2018 ஆம் ஆண்டுக்கான உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரிவின் வருடாந்த செயல்திறன் அறிக்கை
(xv)    2018 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xvi)    2018 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சாதனைகள் அறிக்கை
(xvii)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xviii)    2017 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) அலுவலகத்தின் வருடாந்த அறிக்கை
(xix)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையின் ஆண்டு அறிக்கை
(xx)    2015 ஆம் ஆண்டுக்கான விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஆண்டறிக்கை

(xxi)    2019 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2019.04.01 முதல் 2019.05.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xxii)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பாக நிதி அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 5 ஆம் திகதிய 2113/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்  பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை
(xxiii)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பாக நிதி அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 13 ஆம் திகதிய 2114/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்  பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை
(xxiv)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பாக நிதி அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 14 ஆம் திகதிய 2114/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்  பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை
(xxv)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பாக நிதி அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2019 மே 13 ஆம் திகதிய 2123/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்  பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அகில விராஜ் காரியவசம்                   
(ii)    கௌரவ வசந்த அலுவிஹாரே                -      இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த
(iv)    கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல
(v)    கௌரவ மயந்த திசாநாயக்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

சூரிய மின் உற்பத்தி திட்டம்

மேற்சொன்ன வினாவிற்கு மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

வட மாகாண உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கான மானியம்

மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று அறிவித்தல்கள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முன்மொழியப்பட்டுள்ள சைபர் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் வெகுஜன ஊடகங்களின் கட்டுப்பாடு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1920 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூன் 19ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom