இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஜூன் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-06-07

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டுக்கான (2018.01.01 - 2018.12.31)  நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2018 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டுக் கணக்குகள்
(vi)    2018 ஆம் ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மற்றும் கணக்கறிக்கை
(vii)    2018 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(viii)    2018 ஆம் ஆண்டுக்கான மொனராகலை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(ix)    2018 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் கணக்குகள்
(x)    2018 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றறிக்கை மற்றும் கணக்குகள்
(xi)    2018 ஆம் ஆண்டுக்கான குருணாகல் மாவட்ட செயலகத்தின் செயலணி அறிக்கையும் கணக்குகளும்
(xii)    2018 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xiii)    2018 ஆம் ஆண்டுக்கான கண்டி மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்கு அறிக்கை
(xiv)    2018 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்று அறிக்கையும் கணக்கறிக்கையும்
(xv)    2018 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvi)    2018 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் - கடற்றொழில் பிரிவு வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvii)    2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கையும் கணக்குகளும்
(xviii)    2018 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றல் அறிக்கை
(xix)    2017 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(xx)    2016 ஆம் ஆண்டுக்கான அடிப்படைக் கற்கைகளுக்கான தேசிய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை

(xxi)    2018.02.23 முதல் 2018.10.12 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.04.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அறிக்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxii)    2018.02.23 முதல் 2018.10.12 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.04.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அறிக்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சம்மேளனம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசானினால் சமர்ப்பிக்கப்பட்டது.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    போக்குவரத்து  மற்றும் தொலைத்  தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன                                      
(ii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே     -      மூன்று மனுக்கள்
(iii)     கௌரவ நிஹால் கலப்பத்தி     -      இரண்டு மனுக்கள்
(iv)     கௌரவ கே.கே. பியதாஸ 

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் எதுவித தகவல்களும் வெளியிடப்படாமை

மேற்சொன்ன வினாவிற்கு அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு சமுர்த்தி சலுகைகளை வழங்குதல்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    ஊழியர் சேமலாப நிதிய பண முதலீடு தொடர்பாக 2019.05.24 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.
(ii)    இந்தியா மற்றும் யப்பானுக்கு கொழும்பு துறைமுக கிழக்கு படகுத்துறையினை கையளித்தல் தொடர்பாக 2019.06.04 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மோட்டார் வாகனம் (திருத்தச்) சட்டமூலம்

திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச ஒப்பந்தங்கள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூன் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom