2019 ஜூன் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-06-06 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : புதிதாக அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்தல்
‘B’ : பொது மனுக் குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்கள்
‘C’ : தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் X ஆம் பகுதியையும்;
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் X ஆம் பகுதியையும் ஐந்தாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VIII, IX, X, XI, XII, XIII மற்றும் XIV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் V ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் V, VI, VII மற்றும் VIII ஆம் பகுதிகளையும், எட்டாவது தொகுதியின் III ஆம் பகுதியையும் ; மற்றும்
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் I, II, III, IV, V மற்றும் VI ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான த அசோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயற்திறன் அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப முகாமைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான அரச கணக்குகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2018 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களத்தின் செயல்திறன் அறிக்கை
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டச் செயலகத்தின் செயற்திறன் அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்
(viii) 2018 ஆம் ஆண்டுக்கான களுத்துறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(ix) 2018 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்குகள் அறிக்கை
(x) 2018 ஆம் ஆண்டுக்கான மாத்தறை மாவட்ட செயலகத்தின் செயற்திறன் அறிக்கையும் கணக்கும்
(xi) 2018 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயற்திறன் மதிப்பீட்டு அறிக்கையும் கணக்குகளும்
(xii) 2018 ஆம் ஆண்டுக்கான மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை
(xiii) 2018 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலை திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2018 ஆம் ஆண்டுக்கான நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xv) 2018 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvi) 2018 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvii) 2018.02.23 முதல் 2018.10.12 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.04.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அறிக்கையில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்திக்கான அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xviii) 2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் நிதி அமைச்சு, அரச நிதித் திணைக்களம், அரச கணக்குகள் திணைக்களம், கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களம் மற்றும் முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களுக்குப் பதிலாக கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரவீந்திர சமரவீர
(ii) கௌரவ எஸ். பீ. திசாநாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தில் காணப்படும் சிக்கல்கள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை மதிப்பாளர்கள் நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம்
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இரத்தினபுரி மாவட்டத்தில் நியங்கம கிராம சேவையாளர் பிரிவில் காடழிப்பு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஹேஷா விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1848 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூன் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






