இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஜூன் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-06-04

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)   2015 ஆம் ஆண்டுக்கான தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த செயலாற்றல் அறிக்கையும் கணக்குகளும்
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை
(iv)    2013 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பெறுபேற்று அறிக்கை
(v)    2018 ஆம் ஆண்டுக்கான மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை

(vi)    2017 ஆம் ஆண்டுக்கான நீதிச் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(viii)    20142015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா திரிபோஷ கம்பனியின் ஆண்டறிக்கைகள்
(ix)    2016 ஆம் ஆண்டுக்கான சிரம வாசனா நிதியத்தின் ஆண்டறிக்கை

(x)    2018.02.23 முதல் 2018.10.12 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.04.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அறிக்கையில் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றின் இணைந்த அறிக்கை சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பிமல் ரத்நாயக்க                   
(ii)    கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

இந்தியா மற்றும் யப்பானுக்கு கொழும்பு துறைமுக கிழக்கு படகுத்துறையினை கையளித்தல்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேயிலை ஆராய்ச்சி சபை (திருத்தச்) சட்டமூலம்

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முல்லைதீவு மற்றும் மன்னாரில் மாவட்ட அரங்கங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூன் 06 ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom