2019 மே 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-05-21 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ :பாராளுமன்ற பாதுகாப்பு மற்றும் பணியாளரொருவரின் கைது
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55 (5) ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் காலண்டுக்கான (2018.07.01 – 2018.09.30) பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயல்நிறைவேற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசியலமைப்பின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1979 ஆம் ஆண்டின் 48 ஆ ம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2019 மே 13 ஆம் திகதிய 2123/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) (40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு மற்றும் 2019 ஏப்பிறல் 22 ஆம் திகதிய 2120/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுமான 2019 ஆண்டின் 1 ஆம் இலக்க அவசரகால (நானாவித ஏற்பாடுகள் மற்றும் தத்துவங்கள்) ஒழுங்குவிதிகளின் 75(1) ஆம் ஒழுங்குவிதியின் கீழ் சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2019 மே 13 ஆம் திகதிய 2123/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) (40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களாள் ஆக்கப்பட்டு, 2019 மே 13 ஆம் திகதிய 2123/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் 16 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 112 ஆம் பிரிவின் கீழ் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 திசெம்பர் 31 ஆம் திகதிய 2104/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை மாநாட்டு பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(vii) 2017 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரியில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(viii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xi) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை
(xii) 2017 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xiii) 2017 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் ஆண்டறிக்கை
(xiv) 2018 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xv) 2018 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சின் செயல் நிறைவேற்று அறிக்கை
(xvi) 2016 ஆம் ஆண்டுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvii) 2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xviii) 2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும் மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ அஜித் மான்னப்பெரும
(ii) கௌரவ சமிந்த விஜேசிறி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்
மாத்தறை தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திரசிறி கஜதீர அவர்கள் 2019.03.12 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) 2011 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் சட்டத்தை நீக்குவதற்காக
“செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் (நீக்கல்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
(ii) 1975 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, இலங்கை மதிப்பாளர்கள் நிறுவகச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“இலங்கை மதிப்பாளர்கள் நிறுவகம் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மே 22 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






