இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 மே 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-05-10

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டின் நான்காம் (2018.10.01 - 2018.12.31) காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கை
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஆண்டறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v)    2016 ஆம் ஆண்டுக்கான அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை

(vi)    2018 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்

(viii)    2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் வட மாகாண சபை, ஏறாவூர் நகர சபை, களுத்துரை பிரதேச சபை, காத்தான்குடி நகர சபை, கொழும்பு மாநகர சபை, தென் மாகாண சபை மற்றும் பாணந்துறை நகர சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)   2017.07.01 முதல் 2017.09.30 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் 2019.01.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் நெல் சந்தைப்படுத்தும் சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x)    2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் மோட்டார் வாகான போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ நிரோஷன் பெரேரா          -       மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ மனுஷ நாணாயக்கார

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படும் “இலங்கை உள்ளக வடிவமைப்பாளர் நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” எனும் சட்டமூலம் சபையின் அனுமதியுடன் கௌரவ மயந்த திசாநாயக்க அவர்களால் மீளபெறப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்பாரா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மே 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom