2019 மே 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-05-09 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) (40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2019 ஏப்பிறல் 29 ஆம் திகதிய 2121/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் செயற்திறன் அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தின் வருடாந்த செயற்திறன் அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் வருடாந்த செயல்திறன் அறிக்கை
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான, தொழில்நுட்ப ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ix) 2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் கேகாலை மாவட்டச் செயலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x) 2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் மாத்தளை மாவட்டச் செயலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - ஆறு மனுக்கள்
(ii) கௌரவ ஜயந்த சமரவீர
(iii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) விசேட வியாபாரப் பண்ட அறவீடு சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள்
(ii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(iii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமாக ‘ஒரே நாடு ஒரே சட்டம்’” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1851 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மே 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






