2019 மே 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-05-08 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்களைக் கூட்டுதல் தொடர்பானது
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVII ஆம் பகுதியையும்;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIX ஆம் பகுதியையும்;
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் X ஆம் பகுதியையும்; மற்றும்
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XII மற்றும் XIII ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் II ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை
(iv) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(v) 2017 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்
(vii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(viii) 2017 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த கணக்குகள்
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய நூலக தகவல் விஞ்ஞான நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை
(x) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(xi) 2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் கல்வி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாலித குமார தெவரப்பெரும - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ ஜானக வக்கும்புர
(iii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
(iii) கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
(iv) கௌரவ டலஸ் அழகப்பெரும
ஒத்திவைப்புப் பிரேரணை
“2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்பாரா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் தொடரப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மே 09 ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






