இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஏப்ரல் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-04-24

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : இன்றைய விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை முறை
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மலிக் ஜயதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், தேசிய அரசுப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ்  சனாதிபதியவர்களால், மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் II ஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2019 ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து இலங்கையெங்கணும் நடைமுறைப்படுத்திக்கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1759 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மே 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom