இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஏப்ரல் 02ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-04-02

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  ஊனமுற்ற நபர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்
‘B’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    2018 ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 35(3) ஆம் பிரிவிற்கமைய கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலை நிகழ்ச்சித்திட்டம்

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-     
•    2015 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும்;
•    2016 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் IX, X, மற்றும் XI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் IV ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் I ஆம் பகுதியையும்,  பத்தாவது தொகுதியின் XXXIII மற்றும் XXXIV ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ நிஹால் கலப்பத்தி                   
(ii)    கௌரவ விதுற விக்கிரமநாயக்க
(iii)    கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நிலவும் நெருக்கடி தொடர்பாக 2019.02.22 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்தற்ற வெகுசன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பதிலளித்தார்.


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i)    அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

2019 சனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல், 2019 மார்ச் 28 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு பின்வரும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் பெயர்கள்-

i.    “நிதி மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு”, “நிதி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்;
ii.    “தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி  மற்றும் இளைஞர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு”, “தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்;
iii.    “கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு”, “கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்.

மீளப் பெயரிடப்படுதல் வேண்டும்.

(ii)    அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

112(1) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் 2019 மார்ச் 28 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவென நியமிக்கப்படுதல் வேண்டும்.

ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், உாிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (05) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

மேற்படி ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

(iii)    அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

112(1) ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும்  2019 சனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணைகளினால்  தடைபெறாமல் 2019 மார்ச் 28 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு பின்வரும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அல்லது அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஏழு (07) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக:—

(i)    பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(ii)    மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு
(iii)    தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள்     பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(iv)    சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(v)    புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(vi)    நிதி  பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;        
(vii)    நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(viii)    வெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(ix)    சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(x)    மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xi)    உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xii)    கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xiii)    மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xiv)    பெருந்தோட்ட கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xv)    கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xvi)    நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xvii)    பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xviii)    வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xix)    போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xx)    நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xxi)    கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xxii)    துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xxiii)    தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xxiv)    அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;
(xxv)    தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசைனக் குழு; மற்றும்
(xxvi)    விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசைனக் குழு.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்)  சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் - 2012
(iii)    இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(iv)    இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(v)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(vi)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(vii)    இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2016
(viii)    இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வவுனியாவில் அமைந்துள்ள கச்சல் சமலங்குளம் மற்றும் ஏனைய குளங்களை புனரமைத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1918 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஏப்ரல் 03ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom