இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 மார்ச் 29ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-03-29

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீடு சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில்  நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 சனவரி 03 ஆம் திகதிய 2104/30 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீடு சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில்  நிதி மற்றும் வெகுசன  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 பெப்ரவரி 01 ஆம் திகதிய 2108/65 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீடு சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில்  நிதி மற்றும் வெகுசன   அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 பெப்ரவரி 07 ஆம் திகதிய 2109/15 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீடு சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில்  நிதி மற்றும் வெகுசன   அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 பெப்ரவரி 08 ஆம் திகதிய 2109/20 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீடு சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில்  நிதி மற்றும் வெகுசன  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 பெப்ரவரி 24 ஆம் திகதிய 2111/58 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீடு சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில்  நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 02 ஆம் திகதிய 2112/48 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 பெப்ரவரி 28 ஆம் திகதிய 2112/25 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(viii)    (அத்தியாயம் 235)  சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பான தீர்மானம்
(2019 மார்ச் 5 ஆம் திகதிய 2113/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை )

(ix)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின்    3 (4) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஓகஸ்ட் 14 ஆம் திகதிய 2084/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ அஜித் பி. பெரேரா

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள்> தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2019 மார்ச் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட இருபதாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(ii)    இலங்கையில் தேசிய மதிப்பீட்டு ஆற்றல்களை உறுதிப்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொண்டு அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வெளிவாரிப் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1924 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஏப்ரல் 01ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom