2019 மார்ச் 28ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-03-28 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2017 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில், நீரியல் வளத்துறை திணைக்களத்தின் செயலாற்றறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாள் - குழு நிலை விவாதம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“நாட்டில் நிலவும் மின்சாரத் துண்டிப்பு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 2026 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 29ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






