இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 மார்ச் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-03-19

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(ii)    2014 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்திம கமகே அவர்களுக்குப் பதிலாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சுஜீவ சேனசிங்க                   
(ii)    கௌரவ பிமல் ரத்நாயக்க        -      இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1971 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, தெங்கு அபிவிருத்திச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“தெங்கு அபிவிருத்தி (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள், தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2019 சனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபையின் வருடாந்த அறிக்கை - 2014
(ii)    தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை - 2013
(iii)    தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை - 2013
(iv)    தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை - 2014
(v)    கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை - 2014
(vi)    கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை - 2013
(vii)    இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை - 2014
(viii)    ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகாரச் சபையின் வருடாந்த அறிக்கை - 2015


அதனையடுத்து, 1849 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 21ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[Budget 2019]

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom