இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 மார்ச்14ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-03-14

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2017 ஆம் ஆண்டுக்கான மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)   சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயந்த திசாநாயக்க அவர்களுக்குப் பதிலாக கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ

இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அறிக்கை

மேற்சொன்ன வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ திலக் மாரபன அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் - குழு நிலை விவாதம்

(ii)   ஆட்களையும் ஆதனங்களையும் மற்றும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தோட்ட வீதிகளை மீள வகைப்படுத்தல் மற்றும் பராமரித்தல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1928 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 15ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom