இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 மார்ச்11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-03-11

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153 ஏ உறுப்புரைகளின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான (2018.10.01-2018.12.31) கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
(ii)    2018 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான (2018.10.01-2018.12.31) தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2018 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசானின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ அமீர் அலி சிஹாப்தீன்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

இலங்கை போக்குவரத்து சபை பதவி உயர்வுகளில் நிலவும் முறைகேடுகள்

மேற்சொன்ன போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக் அபேசிங்க அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2019) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாள் இன்றாகும்.


இதனையடுத்து, 1844 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2019 மார்ச் 12ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom