2019 மார்ச் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-03-06 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபையின் ஆண்டு அறிக்கை
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(v) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பான தீர்மானம்
(2018 யூலை 19 ஆம் திகதிய 2080/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை )
(vi) 2016 ஆம் ஆண்டின் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 3 ஆம், 118 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆம் பிரிவின் கீழ் விலைகளின் மீதான உச்சவரம்பு தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஆகஸ்ட் 31 ஆம் திகதிய 2086/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7(2) ஆம், காலநீடிப்பு தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 சனவரி 16 ஆம் திகதிய 2106/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சாகல ரத்நாயக்க
(ii) கௌரவ பாலித குமார தெவரப்பெரும - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
உள்ளூர் திரைப்படைத் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக 2019.02.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எழுப்பிய வினாவிற்கு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“நீதித்துறை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“அரச நிறுவனங்களில் அரசியல் பழிவாங்கல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜயந்த சமரவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1900 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2019 மார்ச் 07ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2019]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






