இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 பெப்ரவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-02-22

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  2018 நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் சபா மண்டபத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    மேதகு சனாதிபதி அவர்களுக்கு நிதி ஆணைக்குழு சமர்ப்பிக்கும் பரிந்துரைகள் - 2019

(ii)    2016 ஆம் ஆண்டுக்கான செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான கட்புல அரங்கக் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழக பாளி, பௌத்த கல்விப் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப் பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(viii)    2017 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ix)    2013 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கும்

(x)    (87 ஆம் அத்தியாயமான) நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் 6அ மற்றும் 19அ பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 115அ என்னும் பிரிவின் கீழ் வெளிப்படையான நம்பிக்கைப் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 சனவரி 28 ஆம் திகதிய 2108/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    இலங்கையின் இன மற்றும் சமய சகவாழ்வினை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஆராய்ந்து தனது  விதப்புரைகளை  பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் இடைக்கால அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ

இலங்கை போக்குவரத்துச் சபையினால் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் மற்றும் இதர

மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக் அபேசிங்க அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நிலவும் நெருக்கடி


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i)    மறைந்த கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்
(ii)    மறைந்த கௌரவ பி. சூ. சூசைதாசன்
(iii)    மறைந்த கௌரவ ஜினதாஸ நியதபால


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கை, ஐக்கிய அமெரிக்கவுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் (SOFA - Status of Forces Agreement)” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1654 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1400 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom