2018 மே 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-05-22 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘B’: தவிசாளர் குழாத்தில் பணியாற்றவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2017.01.01 முதல் 2017.12.31 வரையிலான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) கம்பனியின் வருடாந்த அறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வருடாந்த கணக்கும் அறிக்கையும்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான தேயிலை சிறுபற்றுநிலங்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(v) 2013 ஆம் ஆண்டுக்கான தேசியகல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32(1) ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 சனவரி 18 ஆம் திகதிய 2054/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 03/2018)
(viii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 25 ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 சனவரி 18 ஆம் திகதிய 2054/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 04/2018)
(ix) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 2 மற்றும் 22 ஆம் பிரிவுகளின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 சனவரி 23 ஆம் திகதிய 2055/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கங்கள் 05/2018 மற்றும் 06/2018)
(x) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2, 12, 22 மற்றும் 25 ஆம் பிரிவுகளின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 பெப்ரவரி 21 ஆம் திகதிய 2059/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்கள்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 07/2018)
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பின்வரும் சட்டமூலங்களை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-
(i) 1990 சுவசெரிய மன்றம் - 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏ்றபாடு செய்வதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
(ii) காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்) - 2014 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்காக
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 116 இன் ஒழுங்குவிதிகளின் பிரகாரம், நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு, தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகரையும், குழுக்களின் பிரதித் தவிசாளரையும் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படுகின்ற மேலும் ஆறு (06) உறுப்பினர்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டுமாக
(ii) சபைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 117 இன் ஒழுங்குவிதிகளின் பிரகாரம், சபைக் குழு, தவிசாளராகச் சபாநாயகரையும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படுகின்ற மேலும் ஒன்பது (09) உறுப்பினர்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டுமாக
(iii) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 118 இன் ஒழுங்குவிதிகளின் பிரகாரம், ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படுகின்ற பத்து (10) உறுப்பினர்களுக்கு மேற்படாதவர்களை உள்ளடக்கியிருத்தல் வேண்டுமாக
(iv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 119 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படுகின்ற இருபத்து ஆறு (26) உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டுமாக
(v) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 120 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படுகின்ற இருபத்து ஆறு (26) உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டுமாக
(vi) அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 121 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படுகின்ற தவிசாளர் ஒருவரையும் மேலும் பத்தொன்பது (19) உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டுமாக
(vii) பொது மனுக்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 122 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பொது மனுக்கள் பற்றிய குழு தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படுகின்ற இருபத்து இரண்டு (22) உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டுமாக
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1910 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 23ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.