2018 மே 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-05-10

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i)    பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு

115 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச்சபாநாயகர், குழுக்களின் பிரதித்தவிசாளர், பாராளுமன்றச் சபைமுதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் மேலும் பதினைந்து (15) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக

(ii)    வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழு

2016 நவம்பர் 17 ஆம் திகதி கெளரவ சபாநாயகர் அவா்களால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழுவிற்கு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2016 ஏப்பிறல் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் அறிக்கையிடுவதற்கு இயலாதுள்ளதால் குறிப்பிட்ட தெரிகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை 102 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2018 நவம்பர் 20 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக

(iii)    பிரேசில் நாட்டில் உள்ள இலங்கைத்  தூதரகத்தின் அலுவலகம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகம் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்ட செலவுகளை ஒவ்வொரு வளாகம் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழு

2017 மே 23 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் அவர்களினால் நியமிக்கப்பட்ட பிரேசில் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகம் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்ட செலவுகளை ஒவ்வொரு வளாகம் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவிற்கு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2017 பெப்ரவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் அறிக்கையிடுவதற்கு இயலாதுள்ளதால் குறிப்பிட்ட தெரிகுழுவிற்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை பாராளுமன்றத்தின் 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2018 டிசெம்பர் 05 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக


ஒத்திவைப்புப் பிரேரணை

“2018.05.08 அன்று மேதகு சனாதிபதியின் பாராளுமன்ற உரை” தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.