2018 ஏப்ரல் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-04-04 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : நம்பிக்கையின்மை பிரேரணை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை முறை
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும்; மற்றும்
• பத்தாவது தொகுதி – விசேட கணக்காய்வு அறிக்கை – IV ஆம் பகுதி
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீது நம்பிக்கையின்மை தொடர்பான பிரேரணை
பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 76; எதிராக 122) பின்னர் நிராகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 2204 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஏப்ரல் 5ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.