2018 மார்ச் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-03-22 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 30 ஆம் வாசகத்தின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2017.04.01 - 2017.06.30) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
மற்றும்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153 ஏ உறுப்புரைகளின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான (2017.10.01 - 2017.12.31) கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 நவெம்பர் 06 ஆம் திகதிய 2044/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 நவெம்பர் 07 ஆம் திகதிய 2044/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 நவெம்பர் 08 ஆம் திகதிய 2044/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 நவெம்பர் 20 ஆம் திகதிய 2046/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 டிசம்பர் 13 ஆம் திகதிய 2049/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 டிசம்பர் 14 ஆம் திகதிய 2049/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 டிசம்பர் 31ஆம் திகதிய 2051/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 18 ஆம் திகதிய 2054/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 31 ஆம் திகதிய 2056/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2018 பெப்ரவரி 15 ஆம் திகதிய 2058/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ புத்திக பத்திறண - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
காணி உறுதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல் கருத்திட்டம்
மேற்சொன்ன வினாவிற்கு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மாகாண சபைத் தேர்தல் மற்றும் எல்லை நிர்ணய செயல்முறை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1728 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மார்ச் 23ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.