2018 மார்ச் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-03-07 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை இராணுவத் தரைப்படையின் வருடாந்த செயல்திறன் அறிக்கைகள்
(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல்கள் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைத் தாபித்தல் தொடர்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 10 ஆம் திகதிய 2053/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பீடமொன்றைத் தாபித்தல் தொடர்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 29 ஆம் திகதிய 2056/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ நிஹால் கலப்பத்தி - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வட மாகாணத்தில் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்திர நியமனம் வழங்கல் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 ஆம் இலக்கம் வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் - வாக்கெடுப்பின் போது (ஆதரவாக 53; எதிராக 16)
(iv) பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள் - திருத்தங்களுடன்
(v) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை
அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மார்ச் 8ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.