2018 பெப்ரவரி 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-02-21 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த கல்விப் பட்டப்பின்படிப்பு நிறுவனம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபை
(v) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச் சபை
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம்
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சஜித் பிரேமதாஸ - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
(iii) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர ஆகியோர் தேசிய அரசாங்கத்தை தொடர்தல் தொடர்பாக கூற்றொன்றினை முன்வைத்தனர்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ ஈ. சரவணபவன்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தின் போது கௌரவ அண்ணாமலை நடேசு சிவசக்தி அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கூற்றினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தல் தொடர்பானது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ அனுர சிட்னி ஜயரத்ன அவர்களுக்கு “டாக்டர் எஸ்.எஸ். குணவர்தன சுதேச ஆயுர்வேத அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii) கெளரவ நலின் பண்டார ஜயமஹ அவர்களுக்கு “பொத்துவடவன மகா விகாரை மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் புத்தசாசன அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மாவட்ட மட்டத்தில் பாடசாலைகளை தரம் பிரித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1818 மணியளவில் பாராளுமன்றமானது 2018 பெப்ரவரி 22ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.