2018 பெப்ரவரி 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-02-19

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : ‘பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள்’ மற்றும் ‘பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு’ ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XI ஆம் பகுதியையும் எட்டாவது தொகுதியின் II ஆம் பகுதி

(ii)    இலங்கைச்   சனநாயகச்   சோசலிசக்   குடியரசு     அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் (2017.10.01-2017.12.31) நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
மற்றும்
(iii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153ஏ உறுப்புரைகளின் பிரகாரம் 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2017.07.01 - 2017.09.30) கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன்  சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ்,  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரால் ஆக்கப்பட்டு, 2017 நவெம்பர் 17 ஆம் திகதிய 2045/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(ii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்க சேவை ஆணைக்குழு
(iii)    2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழு
(iv)    2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழு
(v)    2015 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபை
(vi)    2016 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியம்
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபை
(viii)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவகம்
(ix)    2008, 20092010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான லங்கா சதொச லிமிடட்
(x)    2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்
(xi)    2015 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனம்
(xii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபை
(xiii)    2014 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டுக் கட்டடத்தொகுதி அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(xiv)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக்காட்சிச்சாலைத் திணைக்களம்
(xv)    2016 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்
(xvi)    2016 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களம்
(xvii)    2015 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(xviii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2, 12, 22 மற்றும் 25 ஆம் பிரிவுகளின் கீழ்,  குடிபானமல்லாத ஸ்பிரித்து இறக்குமதிக்கான மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக  அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 திசெம்பர் 19 ஆம் திகதிய 2050/11ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
(மது அறிவித்தல் இலக்கம் 1005)

(xix)    2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.01.01 முதல் 2018.01.22 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு

(xx)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்      கீழ்    பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைத் தாபித்தல் தொடர்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 திசெம்பர்  18 ஆம் திகதிய  2050/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(xxi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, வயம்ப    பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி மற்றும் நிதியியற் பீடத்தில் ஆங்கில மொழி கற்பித்தல்     துறையைத் தாபித்தல் தொடர்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 திசெம்பர் 21 ஆம் திகதிய 2050/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அஜித் பி. பெரேரா                        -           ஆறு மனுக்கள்
(ii)    கௌரவ பாலித குமார தெவரப்பெரும                    
(iii)    கௌரவ விஜித ஹேரத்                    
(iv)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார              -           இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே                   -           இரண்டு மனுக்கள்
(vi)    கௌரவ கனக ஹேரத்             
(vii)    கௌரவ இம்ரான் மஹ்ரூப்                    
(viii)    கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-

(i)    தீவிரப் பொறுப்பு முகாமை - இலங்கையில் பொதுத் தனிசு முகாமையைச் சீராக்குவதற்கு தீவிரப் பொறுப்பு முகாமை நோக்கத்துக்காக இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

(ii)    கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கல் - உத்தரவாதத்தினால் வரையறுக்கப்பட்ட கம்பெனியொன்றாகவுள்ள கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையைப் பங்குகளினால் வரையறுக்கப்பட்ட கம்பெனியொன்றாக மாற்றுவதன் மூலம் கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்காக ஒத்திவைக்கப்பட்டன:-

(i)    பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள்
(ii)    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி” தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1823 மணியளவில் பாராளுமன்றமானது 2018 பெப்ரவரி 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.