2017 நவம்பர் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-11-27 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ (திருமதி) தலதா அதுகோரல
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிறப்புரிமை
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் பின்வரும் சிறப்புரிமை பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டன-
(i) தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களால் 2017, நவம்பர் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம்
(ii) தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களால் 2017, நவம்பர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013
(iii) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2013
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கண்டி மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களிலுள்ள குடியிருப்பாளர்கள் குரங்குகள், செங்குரங்குகள், முள்ளம்பன்றிகள் போன்றவையினால் ஏற்படும் துன்புறுத்தல்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஆனந்த அலுத்கமகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1934 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 28ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2018]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.