2017 நவம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-11-25 |
|
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பிரேமலால் ஜயசேகர
(ii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
உள்ளூராட்சி மன்ற தேர்தலைப் பிற்போடல் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் வெளிநாட்டு விஜயம் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான ஆணையாளரான இளவரசர் ஸெயிட் ராட் அல் ஹசைனினால் இலங்கைக்கெதிராக வெளியிடப்பட்ட கருத்தினை மறுதலிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக 2017.09.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு அபிவிருத்திப் பணிப்பொறுப்புகள் அமைச்சரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான கௌரவ திலக் மாரபன அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் - இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் உற்பத்திப் பொருட்கள் தொடர்பாக மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்புத் தீர்வைகளையும் மற்றும் எதிரீட்டுத் தீர்வைகளையும் நுண்ணாய்வு செய்வதற்கும் விதிப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்குமானது
(ii) முற்பாதுகாப்பு வழிமுறைகள் - இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உற்பத்திப் பொருட்கள் மீதான முற்பாதுகாப்பு வழிமுறைகளையிட்டு நுண்ணாய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றைப் பிரயோகிப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புடைய அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானது
(iii) கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குபடுத்தல்) (திருத்தம்) - 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க, கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குபடுத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2014
(iii) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(iv) இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2012
(v) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(vi) இலங்கை சிவில் விமானச்சேவைகள் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(vii) தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 27ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2018]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.