2017 நவம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-11-24 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி மன்றம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவை
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி
(v) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே
(ii) கௌரவ லக்கி ஜயவர்தன - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ புத்திக பத்திறண - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
காலி, கிந்தோட்டையில் இடம்பெற்ற அண்மைய சம்பவம் காரணமாக மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பானது
சிறப்புரிமை
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களால் 2017, 2017 நவம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(iii) காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
அதனையடுத்து, 1929 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 25ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2018]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.