2017 நவம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-11-22 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ சந்தித் சமரசிங்க
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பதினொராம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) இலங்கை மகாவலி அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2012
(iii) இலங்கை மகாவலி அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2013
(iv) அரச மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2013
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“விண்ணப்பதாரிகள் வசிக்கும் குறிப்பிட்ட பிரதேசத்தினுள் ஆசிரியர் நியமனத்தினை வழங்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அப்துல்லா மஹரூப் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1946 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 23ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2018]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.