2017 நவம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-11-20 |
|
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : 2018 வரவு செலவுத்திட்டக் குழுநிலை நிகழ்ச்சி நிரலில் அமைச்சுகளின் செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்திற்கான திருத்தப்பட்ட தினங்கள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த
(ii) கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா
(iii) கௌரவ கனக ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
திரு. அர்ஜூன் அலோசியஸ் உடன் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ஐந்து உறுப்பினர்களுடனான உரையாடல் விபரங்களை வெளியிடுதல் தொடர்பானது
தெரிகுழுக்கள்
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான பாரளுமன்றத்தின் தெரிகுழு
பாராளுமன்றத்திற்கு இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலஎல்லையை 2018 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிப்பு செய்வதற்காக
(ii) வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழு
அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2016 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இயலாதுள்ளதால் காலஎல்லையை 2018 மே மாதம் 20 ஆம் திகதி வரை நீடிப்பு செய்வதற்காக
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
(ii) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1725 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.