2017 நவம்பர் 16ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-11-16 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் வருடாந்த அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடமொன்றை நிறுவுவது தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 21 ஆம் திகதிய 2037/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ருகுணு பல்கலைக்கழகத்தில் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடமொன்றை நிறுவுவது தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 21 ஆம் திகதிய 2037/16ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, வயம்ப பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பீடமொன்றை நிறுவுவது தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 21 ஆம் திகதிய 2037/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் கலாசார பீடத்தில் சமூகவியல் துறைத் திணைக்களமொன்றை நிறுவுவது தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 29 ஆம் திகதிய 2038/75 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) 2016 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களம்
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன
(ii) கௌரவ அசோக் அபேசிங்க
(iii) கௌரவ நிஹால் கலப்பத்தி
(iv) கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வடமாகாணத்தில் சட்டவிரோத மீன் பிடித்தல் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) சட்டவிரோத நடவடிக்கைகளினால் பாலியாறு ஆற்றங்கரைகளில் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைஸர் முஸ்தபா அவர்கள் பதிலளித்தார்.
(ii) செவனகல, பெல்வத்த மற்றும் ஹிங்குரான கரும்பு விவசாயிகளின் மனக்குறைகள் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் கௌரவ றிஸாட் பதியுதீன் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள் இன்றாகும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூல (2018) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 151 பேரும் எதிராக 58 பேரும் வாக்களித்தனர்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 17ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2018]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.