2017 நவம்பர் 13ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-11-13 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆம் பிரிவின் கீழ் மருத்துவ உபகரணங்கள் விலைகுறித்தல் தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 04 ஆம் திகதிய 2030/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் மூன்றாவது அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அழகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ எஸ். பீ. நாவின்ன
(ii) கௌரவ அஜித் பி. பெரேரா
(iii) கௌரவ விஜித பேருகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும்.
இதனையடுத்து, 1807 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2017 நவம்பர் 14ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2018]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.