2017 ஒக்டோபர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-10-03 |
|
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போதான பிரேரணைகள்
இலங்கைப் பாராளுமன்ற சனநாயகத்தின் 70 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்கான பிரேரணையை கௌரவ பிரதம அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இதனை கௌரவ பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஆமோதித்தார்.
அதனையடுத்து, 1605 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஒக்டோபர் 09ஆந் திகதி திங்கட்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.