2017 செப்டெம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-09-21 |
சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய தலைமை தாங்கினார்.
பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
(அ) செயலாற்றுகை அறிக்கைகள்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதி திணைக்களம்.
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான சட்ட வரைஞர் திணைக்களம்.
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம்.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறியினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
(ii) கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.
(iii) கௌரவ எட்வட் குணசேகர, பா.உ.
(iv) கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
(v) கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர், பா.உ.
(மனுக்கள் பொதுமனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் சேவைகளை நடைமுறைப்படுத்தலும் ஏனைய மாற்று நிவாரணங்களுடன் “சமுர்த்தி நிவாரணங்களை” அதிகரித்தலும்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவினால் எழுப்பப்பட்ட “யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்கொலை முயற்சிகளின் அதிகரிப்பு” பற்றிய வினாவிற்கு சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சராகிய கௌரவ எஸ்.பீ. திசாநாயக்க விடையளித்தார்.
(ii) கௌரவ தினேஷே் குணவர்தனவினால் 2017.09.06 ஆம் திகதியன்று எழுப்பப்பட்ட “மேஜர் ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பான கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினது கருத்து மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு” பற்றிய வினாவிற்கு அபிவிருத்திப் பணிப்பொறுப்புகள் அமைச்சரும் வெளிவிவகார அமைச்சருமான கௌரவ திலக் மாரபன விடையளித்தார்.
(iii) கௌரவ டக்ளஸ் தேவானந்தாவினால் 2017.09.06 ஆம் திகதியன்று எழுப்பப்பட்ட “அரிசிற்கான கட்டுப்பாட்டு விலை” பற்றிய வினாவிற்கு கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர், கௌரவ றிஸாட் பதியுதீன் விடையளித்தார்.
சபையின் பொது அலுவல்கள்
இன்றைய ஒழுங்குப் பத்திரத்தின் *1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் இலங்கை நிறைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2017 மார்ச்சு 08) மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் மதிப்பீடு செய்யப்பட்டு பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் முறையாக நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயமென்ற வகையில், ரோஹிங்யா பிரச்சினையில் தலையிடுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எச்.எம். சல்மானினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றமானது 1857 மணியளவில் 2017 செப்தெம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






